பஸ்களிலும் ‘யுக்திய’ விசேட சோதனை நடவடிக்கை
ஒரு வார காலத்துக்கு இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுலில் இருக்கும்.

நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ என்ற விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.