‘யுக்திய’ நடவடிக்கை: மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது
‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது மேலும் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (ஜனவரி 03) நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது 287 கிராம் ஹெரோயின், 246 கிராம் ஐஸ், 5.4 கிலோகிராம் கஞ்சா மற்றும் 119 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
டிசெம்பர் 17, 2023 அன்று ‘யுக்திய’ சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 22,500 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படை 21,700 க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
ஏராளமான போதைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், பல சோதனைகளின் போது சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பல சொத்துக்களையும் கைப்பற்றியுள்ளனர். (நியூஸ்21)