இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்
இந்த சட்டமானது 2024 ஆம் ஆண்டின் இணைய பாதுகாப்புச் சட்ட எண் 09 ஆக நடைமுறைக்கு வருகின்றது.

திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) தனது கையொப்பத்தை இட்டுள்ளார்.
அதன்படி, இந்த சட்டமானது 2024 ஆம் ஆண்டின் இணைய பாதுகாப்புச் சட்ட எண் 09 ஆக நடைமுறைக்கு வருகின்றது.
கடந்த ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இல்லாமல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.