ஜனாதிபதி தேர்தல்: ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 1.8 பில்லியன் ரூபாய் வரை செலவு செய்யலாம்
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு ரூ.109 (நூற்று ஒன்பது ரூபாய்) வரை அதிகபட்சமாக செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் – 2024இல் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு ரூ.109 (நூற்று ஒன்பது ரூபாய்) வரை அதிகபட்சமாக செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு வேட்பாளர் செலவளிக்கக்கூடி அதிகபட்ச தொகை ரூ. 1,868,298,586.00 (ஒரு பில்லியன், எண்ணூற்று அறுபத்தெட்டு மில்லியன், இருநூற்று தொண்ணூற்று எட்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்தி ஆறு ரூபாய்) ஆகும்.