தீவிரமடையும் மழை காலநிலை - வெளியான அறிவிப்பு
நாட்டில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னாரிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கலாம் என்பதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.