சுற்றுலா பயணிகளின் வருகை சடுதியாக அதிகரிப்பு
ஜூலை முதல் இரண்டு வாரங்களில் 55,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஜூலை முதல் இரண்டு வாரங்களில் 55,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இதுவரை 55,566 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.
ஜூலை மாதத்திலும் 8,169 இந்திய பிரஜைகள் வந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இதற்கிடையில், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 4,474 பேர் வந்துள்ள அதே நேரத்தில் சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த மாதம் 2,893 சீன பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
மேலும், ஜேர்மனியில் இருந்து 2,824 நபர்களும், ரஷ்யாவிலிருந்து 2,599 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.