தன்சல் பதிவு தொடர்பில் ஏற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் வெசாக் தன்சல்களை பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் வெசாக் தன்சல்களை பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து தன்சல்களும் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்ய நன்கொடையாளர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
தன்சல் காலப்பகுதியில் தன்சல், உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகளில் மூவாயிரம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தன்சலை பதிவு செய்து பொது சுகாதார பரிசோதகரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்றும், உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவும் தொற்று நோய்களை தடுக்க தன்சல் நன்கொடையாளர்கள் மற்றும் பிற உணவு விற்பனையாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.