தமிழக வீரர்கள் இல்லாத உலககோப்பை இந்திய அணி.. 20 ஆண்டுகளுக்கு பிறகு தவறிய இடம்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் பங்கேற்றனர். 

செப்டெம்பர் 7, 2023 - 21:49
தமிழக வீரர்கள் இல்லாத உலககோப்பை இந்திய அணி.. 20 ஆண்டுகளுக்கு பிறகு தவறிய இடம்!

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் பங்கேற்றனர். 

இதில் தமிழக வீரர்கள் யாரும் இடம்பெறாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான வரலாற்றை தமிழகம் பிடித்திருக்கிறது. 

இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியே சென்னையில் தான் வென்று இருக்கிறது.

இந்தியாவின் முதல் உலககோப்பை அணியில் தமிழக வீரர் தான் கேப்டனாக இருந்திருக்கிறார். மும்பையை அடுத்து தமிழ்நாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பல தமிழக வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். 

ஆனால் உலகக்கோப்பை வரலாற்றில் மொத்தமே இரண்டு முறை தான் தமிழக வீரர்கள் இடம் பெறாத சூழல் உருவாகி இருக்கிறது.

1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தமிழக வீரர் வெங்கட்ராகவன் தான் கேப்டனாக இருந்திருக்கிறார். இதேபோன்று 1979 ஆம் ஆண்டிலும் வெங்கட்ராகவன் இந்திய அணியை வழிநடத்தி சென்றிருக்கிறார். 

1983 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் தமிழகத்திலிருந்து இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். 1987 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் ஆகிய இரண்டு தமிழர்கள் உலகக்கோப்பை அணியில் விளையாடி இருக்கிறார்கள்.

1992 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்துக்கு மட்டும் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்தது. 1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த யாருக்கும் இடம் கிடைக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் வளர்ந்து தமிழகத்தில் படித்து கிரிக்கெட் விளையாடிய ஆஷிஷ் கபூர் என்ற வீரருக்கு இடம் கிடைத்தது .

1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் மற்றும் ராபின் சிங்கருக்கு இடம் கிடைத்திருக்கிறது. முதல்முறையாக உலகக்கோப்பை அணியில் எந்த தமிழக வீரரும் இடம் பெறாத நிலையில், 2003 ஆம் ஆண்டுதான் அந்த தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது. 

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு உலககோப்பை அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இடம் பிடித்திருந்தார்கள். 

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் என இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் யாருக்கும் தமிழகத்தில் இருந்து இடம் கிடைக்க வில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!