நான் பார்த்த மிகச்சிறந்த ODI பேட்ஸ்மேன் சச்சின் கிடையாது..  இவர்தான்... ரிக்கி பாண்டிங் பரபரப்பு கருத்து!

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 

ஒக்டோபர் 29, 2023 - 14:06
நான் பார்த்த மிகச்சிறந்த ODI பேட்ஸ்மேன் சச்சின் கிடையாது..  இவர்தான்... ரிக்கி பாண்டிங் பரபரப்பு கருத்து!

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 

மைதானத்திற்கு பார்வையாளர்களை கொண்டு வந்த விதத்திலும், தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் பார்வையாளர்களை கொண்டு வந்த விதத்திலும் நடப்பு உலகக் கோப்பை தொடர்தான் மிகச்சிறந்த உலகக் கோப்பை தொடராக இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறந்த ஐந்து வீரர்கள் என்று கூறப்பட்டதில் ஸ்மித்து, ஜோ ரூட், பாபர் அசாம் மூன்று பேரும் பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. 

மேலும் சராசரிக்கும் கீழான செயல்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். அணியின் வெற்றியில் அவர்களுடைய பேட்டிங் தாக்கம் எதுவும் இல்லை.

அதே சமயத்தில் இந்த குழுவில் இடம் பெற்று இருக்கும் விராட் கோலி மட்டுமே மிகச் சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். 

இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தை நின்று வென்று கொடுத்தார்.

இந்த நிலையில் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துள்ள 49 சதங்களை முறியடித்து ஐம்பதாவது சதத்தை விராட் கோலி எட்டுவாரா? என்பது கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்த வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தனி வீரராக விராட் கோலி உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் சேர்த்திருக்கிறார்.

விராட் கோலி குறித்து ஆஸ்திரேலியா லெஜெண்ட் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” நான் இதுவரை பார்த்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் விராட் கோலி போல யாரையும் பார்த்தது கிடையாது!” என்று கூறியிருக்கிறார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!