சட்டவிரோத குடியேற்றத்துக்கு இடமில்லை – கனடா மீண்டும் கடுமையான நடவடிக்கை
கைதானவர்கள் அனைவரும் அகதி நிலைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனடா அரசு, சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்நிலையில், கியூபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் 19 பேர் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹெய்ட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழு, அமெரிக்காவிலிருந்து கனடா எல்லையை சட்டவிரோதமாகக் கடந்து உள்நுழைய முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
கைதானவர்கள் அனைவரும் அகதி நிலைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனடா, சமீபகாலமாக எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் கண்டிப்பாக்கி, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகிறது.