ஜனாதிபதியின் அனுமதி தேவையில்லை - அமைச்சர் ரொஷான் ரணசிங்க
விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் வரை தனது கடமைகளை தொடர்ந்து செய்வதாக ரணசிங்க கூறியுள்ளார்

முன்னாள் அமைச்சரும் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்கவுக்கு தனது அமைச்சுப் பதவியை வழங்கத் தயார் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், "எனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி நான் முடிவை எடுத்தேன்." என்றதுடன், இடைக்கால குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் வரை தனது கடமைகளை தொடர்ந்து செய்வதாக ரணசிங்க கூறியுள்ளார்.
“நாட்டிற்கு நான் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஜனாதிபதி விரும்பினால் என்னை பதவி நீக்கம் செய்ய முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.