யாழ்ப்பாணத்துக்கு சென்றார் நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (02) யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (02) யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நிதியமைச்சரும், இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்டோரும் அங்கு வந்துள்ளனர்.
இதன்போது நிர்மலா சீதாராமன், யாழ். கலாசார மையத்தை பார்வையிட்டுள்ளார்.
மேலும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு செல்லவுள்ளதாகவும், யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) திறந்து வைக்கவுள்ளார்.