அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
‘அஸ்வெசும’ வேலை திட்டம் மலையக பகுதிகளில் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாக வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.

‘அஸ்வெசும’ வேலை திட்டம் மலையக பகுதிகளில் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், இத்திட்டம் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியமென கூறியுள்ளார்.
அஸ்வெசும உதவியை பெறத் தகுதி இருந்தும், பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் மற்றும், பட்டியலில் உள்வாங்கபட்டும் இதுவரை பணம் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் தமது பிரதேச செயலகத்துக்குச் சென்று மீண்டும் விண்ணப்பிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலே அவர் இதனைக் கூறியுள்ளார்.