இலங்கை குடியுரிமை பெறுவது தொடர்பில் புதிய அறிவிப்பு

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மே 30, 2024 - 11:01
இலங்கை குடியுரிமை பெறுவது தொடர்பில் புதிய அறிவிப்பு

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் 2024ம் ஆண்டு நிரந்தர வதிவிட வீசா உத்தரவு என இந்த வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், குடியுரிமை சட்டத்தின் 19, 20 அல்லது 21ம் சரத்தின் பிரகாரம் குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.

மேலும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணையாளர்கள் திருமணம் செய்து கொண்டு ஆறு மாதங்களில் விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் ரத்தானால் குடியுரிமையும் ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அல்லது தாத்தா,பாட்டி இலங்கையில் பிறந்து இலங்கை குடியுரிமை கொண்டவர்களாயின் அவ்வாறனவர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுவர்.

அடிப்படை விண்ணப்பதாரிகளிடம் ஆயிரம் டொலர்கள் அறவீடு செய்யப்படும் அதேவேளை, வெளிநாட்டு வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடம் தலா 400 டொலர்கள் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி 2383/17ம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!