தென்கிழக்கு பல்கலைகழக ஊடகப்பிரிவுக்கு புதிய நிர்வாகிகள்!

தென்கிழக்கு பல்கலைகழக ஊடகப்பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கரினால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைகழக ஊடகப்பிரிவின் இணைப்பாளராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ.ஷிப்லி, செயலாளராக தென் கிழக்கு பல்கலைக்கழக கணக்காய்வு உதவியாளர் எஸ்.எம். கலீல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஊடகப்பிரிவு உறுப்பினர்களாக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.எம். சிராஜ், விரிவுரையாளர் எம் அப்துல் ரஸாக், விரிவுரையாளர் சதீக்கா பர்வீன், விடுதிப் பொறுப்பாளர் ஆர். ரிஸானா, சிரேஷ்ட நூலக உதவியாளர் சீ.எம்.ஏ. முனாஸ், ஆய்வு கூட உதவியாளர் எம் வை அமீர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சார்பில் எம்.ஏ. ஸீம் பிஸ்தி (கலை, கலாசார பீடம்), டி.எம்.வை. லசித் (பொறியியல் பீடம்), இஸட்.எஸ்.எஸ். குணரத்ன (தொழிநுட்ப பீடம்) ஆகியோரும் ஊடகப்பிரிவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைகழக ஊடகப்பிரிவை பலப்படுத்தி மாணவர்களை ஒன்றிணைத்து எதிர்காலத்தில் சிறப்பாக பெறுபேறுகளை மக்கள் முன் கொண்டு செல்ல ஆக்கபூர்வமான திட்டங்கள் குறித்து விஷேட கலந்துரையாடலும் உபேவேந்தர் தலைமையில் இடம்பெற்றது.
(நூருல் ஹுதா உமர்)