ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடிய 3,000 பேர் கைது
முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட வீரர்களில், 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், 194 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள், 198 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள்.
மேலும், தப்பியோடிய 330 வீரர்கள் மற்றும் அதிகாரிகளையும் இலங்கை பொலிஸார் கைது செய்ததாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.