இளைஞர்கள் இருவர் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் நேற்று (23) கைது.

மார்ச் 25, 2025 - 14:08
இளைஞர்கள் இருவர் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக உள்ள சிம்மாசன வீதியில் வைத்து இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் வருவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேனுக்கு தீ வைத்த  குற்றத்திற்காக சந்தேகநபர் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு கந்தர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெவிநுவர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர். சம்பவம் தொடர்பில் கந்தர மற்றும் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!