அர்ச்சுனா இராமநாதன் எம்பி கைது செய்யப்பட்டார்
யாழ்ப்பாணம் பகுதியில் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதன் இன்று (29) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பகுதியில் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.