கத்திக்குத்து சம்பவத்தில் தாய் மற்றும் மகன் படுகாயம்
தாயும் மகனும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய, அநுருத்தகம பிரதேசத்தில் இன்று(11) காலை, தகராறு காரணமாக பெண் ஒருவரும் அவரது மகனும் கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 25 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இருவரும் முதலில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாயும் மகனும் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.