பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை!

கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும்

டிசம்பர் 7, 2023 - 13:54
பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை!

2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பிற்பாடு பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை எனவும் புதிதாக பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துதாருக்கள் எனவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் கேட்டுக்கொண்டார். 

சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் 2024 வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதம் நேற்று(6) நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே தௌபீக் எம்.பி மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் நிறைவடைந்து நீண்டகாலமாகியும் காணிப் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை. இது தொடர்பில் பல சந்தப்பங்களில் பேசியும் உரிய அதிகாரிகளை சந்தித்தும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. 

“கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும்” என்றார். 

மேலும், திருகோணமலை மாவட்டமானது சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் என்பதால், அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கோள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உத்தியோகத்தர்தர் குறைபாடு காணப்படுவதாகவும் அதனை நிவர்த்தி  செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

(எஸ். சினீஸ் கான்) 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!