வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்படும் பணம்! நீண்ட வரிசைகளில் மக்கள்!
நாட்டின் பல பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவு, ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருவதுடன், கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும், இத்திட்டத்தில் பலர் நிராகரிக்கப்பட்டிருந்த காரணத்தால் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
அத்துடன், புதிதாக இணைக்கப்படுபவர்களுக்கு இரண்டு மாத பணம் ஒன்றாக செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மையை பெறுவதற்குத் தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் தற்போது நீண்ட வரிசைகளை காண முடிகின்றது.
எனினும், பணம் வைப்பிலிடப்படும் திகதி குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.