அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற முன்பள்ளிச் சிறுமி உயிரிழப்பு
முன்பள்ளிச் சிறுமி ஒருவர் அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

முன்பள்ளிச் சிறுமி ஒருவர் அலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மங்கொன முங்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து வயதுடைய முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.