மிரிஹான போராட்டம்: 45 பேர் கைது; 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில்
இதேவேளை, கலவரத்தில் காயமடைந்த 37 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 44 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கலவரத்தில் காயமடைந்த 37 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 14 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மூன்று பொலிஸார், மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.