வவுனியாவில் லேசான நிலநடுக்கம் பதிவு

வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஜுன் 19, 2024 - 11:31
வவுனியாவில் லேசான நிலநடுக்கம் பதிவு

வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவான இந்த சிறிய நிலநடுக்கம், நேற்று இரவு 10.55 மற்றும் 11.10 மணிக்கு இடையே ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் உள்ள நில அதிர்வு நிலையங்களில் இது பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!