அமைச்சர் உதயநிதி - ஆளுநர் செந்தில் சந்திப்பு!

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். 

ஜுலை 6, 2023 - 15:57
ஜுலை 6, 2023 - 16:03
அமைச்சர் உதயநிதி - ஆளுநர் செந்தில் சந்திப்பு!

இந்தியா - தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். 

தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இலங்கை இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும்  அங்கிகரிக்கப்பட்டு, பாராட்டப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலினிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

(நூருல் ஹுதா உமர்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!