உச்சம் தொடும் பால்மா விலை: நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்கான காரணம் எனவும் நிறுவனங்கள் கூறியுள்ளன.
அதன்படி, எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் கையிருப்பு தீர்ந்து வருகின்றது.
இதேவேளை, 400 கிராம் பால் மா பொதியின் விலை 1000 ரூபாய்க்கு அதிகமாகவும், ஒரு கிலோ பால் மா பாக்கெட் 2500 ரூபாய் என்ற விலையை தாண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 400 கிராம் பால் மா பாக்கெட் 790 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாக்கெட் 1945 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.