பெப்ரவரி 27 வரை 4 ராசிகளுக்கு எச்சரிக்கை
மகர ராசியில் 20 நாட்கள் வரை புதன் பயணிப்பதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இதனால், யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

மகர ராசியில் 20 நாட்கள் வரை புதன் பயணிப்பதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இதனால், யாருக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷம் - இந்த காலப்பகுதியில் வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் அதிக வேலைச்சுமையையும், அதிக செலவுகளையும் சந்திக்க நேரிடும்.
ரிஷபம் - பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். இக்காலத்தில் உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. மிகவும் கவனமாக இருக்கவும்.
கடகம் - திருமணமாகாத கடக ராசியினருக்கு இக்காலத்தில் நல்ல திருமண வரன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி - கன்னி ராசியினர் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு, நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதிக செலவுகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம் - விருச்சிக ராசியினருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக தொண்டுகளை செய்வீர்கள்.
தனுசு - தனுசு ராசியினரின் நிதி நிலை வலுபெறும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
மகரம் - மகர ராசியின் கௌரவம் அதிகரிப்பதோடு, நிதி நிலையும் வலுபெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். உங்களின் பணிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கும்பம் - கும்ப ராசியினருக்கு அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது.
மீனம் - மீன ராசியினரின் வருமானம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும்.