நட்சத்திர வீரருக்கு காயம்.. பவர் பிளே ஓவர்களை வீச ஆளில்லை.. தவிக்கும் இலங்கை
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்சன காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்துவீச்சாளரான சஹன் மாற்று வீரராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்சன காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இளம் சுழற்பந்துவீச்சாளரான சஹன் மாற்று வீரராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடப்பு சாம்பியனான இலங்கை அணி மீண்டும் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதுவரை இலங்கை அணி ஆசியக் கோப்பை 5 முறை வென்றுள்ளது.
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி முன்னேறி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி இன்று ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹீஷ் தீக்சன காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளராக யார் செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பவர் பிளே ஓவர்களிலேயே மஹீஷ் தீக்சன அட்டாக்கில் கொண்டு வரப்படுவார். அவருக்கு பின் இலங்கை இளம் வீரர் வெல்லாலகே மற்றும் அசலங்க ஆகியோர் அட்டாக்கில் கொண்டு வரப்படுவர்.
ரோகித் சர்மா படைக்கப் போகும் சாதனை.. மிகமுக்கியப் போட்டியில் ஹிட்மேன்!
இதனால் பவர் பிளே ஓவர்களில் இலங்கை அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளராக யார் ஆடுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கொழும்பு மைதானத்தில் 3வது சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் களமிறங்குவது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர் சஹன் அல்லது துஷான் ஹேமாந்த ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள தீக்சன 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த போதிலும் கடைசி 3 ஓவர்களை நொண்டியபடியே வீசி சென்றார். இதனால் தீக்சனவின் ரோலை எந்த வீரர் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.