ஜூலி சங்கை சந்தித்து பேசினார் மனோ கணேசன்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடல்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நகர்வு, அதிகாரப் பகிர்வு, மலையக பெருந்தோட்டக் காணி உரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.