மாங்குளம் ரயில் நிலைய வளாகத்தில் சிரமதானப் பணிகள்
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் அனுசரணையுடன் மாங்குளம் ரயில் நிலைய அதிபர் கலைவேந்தனால் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரமதான நிகழ்வில், ரயில்வே திணைக்கள அத்தியட்சகர் நிரந்த விசுந்தரவுடன், மாங்குளம் மக்களும் கலந்துகொண்டனர்

மாங்குளம் ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மரக்கன்றுகளும் நடப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் அனுசரணையுடன் மாங்குளம் ரயில் நிலைய அதிபர் கலைவேந்தனால் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிரமதான நிகழ்வில், ரயில்வே திணைக்கள அத்தியட்சகர் நிரந்த விசுந்தரவுடன், மாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.