காதலியை கொன்று, பெற்றோரைக் காயப்படுத்தி, தன் உயிரை மாய்த்த நபர்!
சந்தேக நபர், அவரது பெற்றோரையும் தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்தி, பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இன்று (ஜூலை 23) அதிகாலை பதியதலாவ, மரங்கலவில் உள்ள ஒரு வீட்டிற்குள் 31 வயது நபர் ஒருவர் திடீரென நுழைந்து, தன்னுடன் காதல் உறவில் இருந்ததாக நம்பப்படும் 22 வயது பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
சந்தேக நபர், அவரது பெற்றோரையும் தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்தி, பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் தோல்வியுடன் தொடர்புடைய தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்குக் காரணம் என்று முதற்கட்ட பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த பெற்றோர் தற்போது மஹோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் குற்றம் நடந்த இடம் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது, விசாரணைகள் தொடர்கின்றன.
பதியதலாவ பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (நியூஸ்21)