அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு: 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை
அம்பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
அம்பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதான நிலந்த வருஷ விதான என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
காரொன்றில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதுடன், மற்றுமொரு பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் எனவும், நகரசபை உறுப்பினர் அல்லர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.