போலி நாணயத்தாளை வீட்டில் அச்சடித்தவர் நகை கடையில் சிக்கினார்!
தங்க “நெக்லஸ்” வாங்க விருப்பம் தெரிவித்து கடைக்குள் நுழைந்த சந்தேகநபர் ரூ.5,000 தாள்களை கட்டுக்கட்டாக வழங்கியுள்ளார்.

இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி தங்க நகையை கொள்வனவு செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 102 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்க “நெக்லஸ்” வாங்க விருப்பம் தெரிவித்து கடைக்குள் நுழைந்த சந்தேகநபர் ரூ.5,000 தாள்களை கட்டுக்கட்டாக வழங்கியுள்ளார்.
குறித்த நாணயத்தாள்கள் போலியானவை என அறிந்த நகைக் கடை உரிமையாளர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
வீட்டில் உள்ள பிரிண்டர் மூலம் போலி நாணயத்தாள்களை சந்தேகநபர் அச்சடித்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.