மாமியாரை கொலை செய்து மனைவி, மகளை தாக்கியவர் கைது!

இந்த வாக்குவாதத்தில் மாமியாரின் தலையில் கல்லால் தாக்கிய சந்தேகநபர், பின்தொடர்ந்து வந்த மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிமையால் அவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார்.

ஆகஸ்ட் 21, 2024 - 16:32
ஆகஸ்ட் 21, 2024 - 16:36
மாமியாரை கொலை செய்து மனைவி, மகளை தாக்கியவர் கைது!

News21Tamil (Colombo) சப்ரகமுவ மாகாணம், கலபிடமட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெவங்கம பிரதேசத்தில் மாமியாரைக் கொலை செய்து, மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவர்களுக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்  44 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதித் தகராறு காரணமாக மனைவி, மகள் மற்றும் மாமியார் ஆகியோருடன் நேற்று (20) மாலை சந்தேகநபர் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாக்குவாதத்தில் மாமியாரின் தலையில் கல்லால் தாக்கிய சந்தேகநபர், தடுக்க வந்த மனைவி மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிமையால் அவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளார்.

சம்பவத்தில் 55 வயதுடைய மாமியார், கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம், கலபிடமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் அறிக்கை விவரம் : 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!