7 கிலோகிராம் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

15 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 07 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 8, 2023 - 15:28
7 கிலோகிராம் தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

15 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 07 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குறித்த நபர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதுடைய கொழும்பு மருதானையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் அடிக்கடி சுற்றுலா செல்லும் வர்த்தகர் ஆவார்.

சந்தேக நபர் இன்று காலை 09.20 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

விமான நிலையத்தின் சுங்க வளாகத்தில் இருந்து வெளியே வந்த அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது கைது செய்யப்பட்டார்.

04 கிலோ 400 கிராம் எடையுடைய 42 தங்க பிஸ்கட்டுகளும், 02 கிலோ 600 கிராம் எடையுடைய நகைகளும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!