மின்துண்டிப்பு தொடர்பில் மௌனம் கலைத்தார் மஹிந்த

மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை தவறான செயல் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 6, 2023 - 12:00
மின்துண்டிப்பு தொடர்பில் மௌனம் கலைத்தார் மஹிந்த

மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை தவறான செயல் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பலரும் கருத்துக்களை வெளியட்டு வந்த நிலையில், கருத்து வெளியிடாமல் அமைதியா இருந்த மஹிந்த ராஜபக்ஷ, தற்போது மௌம் கலைத்துள்ளார்.

விகாரையின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாவிடின் அதனை பகுதிகளாக செலுத்த அனுமதிக்குமாறு மின்சார அமைச்சரிடம் கோரவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், நாட்டின் முதலாவது பௌத்த மையமான மிஹிந்தலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விகாரையின் மின்சார கட்டணமான 41 இலட்சம் ரூபாயை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ செலுத்தியுள்ள நிலையில் விகாரக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!