நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்

வீடு கட்டித் தருவதாகக் கூறி 70 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. 

ஜுன் 21, 2023 - 01:19

சந்தேக நபரை 22ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொம்பனி தெருவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீடமைப்புத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாகக் கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். 

முறைப்பாட்டாளர் இரண்டு தடவைகள் காசோலைகள் மற்றும் பணத்தின் ஊடாக இந்த தொகையை சந்தேக நபருக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கொம்பனி தெரு பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!