லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு - விலை விவரங்கள் இதோ!
மாதாந்த விலை திருத்தத்துக்கு அமைவாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தனது புதிய விலை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

மாதாந்த விலை திருத்தத்துக்கு அமைவாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தனது புதிய விலை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 1005 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,738 ரூபாயாகும்.
அத்துடன், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 402 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1502 ரூபாயாகும்.
மேலும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 183 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 700 ரூபாய் தீர்மானிக்கப்பட்டுள்ளது.