தூர இடங்களுக்குச் செல்லும் பஸ் ஊழியர்களுக்கு கசிப்பு விற்பனை – 19 வயது கர்ப்பிணி கைது!
கர்ப்பிணி ஒருவர், பஸ் ஊழியர்களுக்கு மதுபான பெக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூர இடங்களுக்குச் செல்லும் பஸ் ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 19 வயது கர்ப்பிணியை, வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ, வைக்கால பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று (20) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது, அவர் தனது கணவருடன் இணைந்து மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டிருந்ததாகவும், அந்த இடத்திலிருந்து 96 போத்தல்கள் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கர்ப்பிணி ஒருவர், பஸ் ஊழியர்களுக்கு மதுபான பெக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட கசிப்புத் தொகையையும் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.