லாஃப்ஸ் எரிவாயு விலை குறைகிறது
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,840 ரூபாய் ஆகும்.

லாஃப்ஸ் எரிவாயு விலையும் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,840 ரூபாய் ஆகும்.
அத்துடன், 5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 110 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,542 ரூபாயாகும்.
இதேவேளை, தற்போது 4,115 ரூபாயாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர், இன்று நள்ளிரவு முதல் 3,940 ரூபாயாக குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.