ரஜினியின் கடைசிப்படம் ஜெயிலர் 2? லதா ரஜினிகாந்த் வெளியிட்ட தகவல்!
கோலிவுட் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.

கோலிவுட் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ஓய்வெடுக்கவுள்ளார் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், சமீபத்தில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர் ரஜினிக்குத் தென்னிந்தியா மட்டுமல்லாமல் வட இந்தியாவில் அதிகம் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் இவரின் திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் வெளியாகி வருகிறது.
நடிகர் ரஜினியின் நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் இணைந்தார்.
இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது நடிகர் ரஜினிகாந்த்திற்கு திடீரென உடல் நிலையில் சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை என்று கூறப்படும் நிலையில், சமீப காலமாக ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தகு தொடர்ந்து சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
“எனக்குத் தெரிந்தால் சொல்லலாம், ஆனால் அதைப்பற்றி யோசிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார்” என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.