அதே மாதிரி கேப்டன்.. அதே மாதிரி விக்கெட் கீப்பர்.. அதே மாதிரி ஃபினிஷிங்.. தோனியாக மாறிய கேஎல் ராகுல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தோனியை போல் விக்கெட் கீப்பர், கேப்டன்சி மற்றும் ஃபினிஷர் என்று அனைத்து ரோல்களிலும் அசத்தலாக ஆடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப்டெம்பர் 23, 2023 - 11:40
அதே மாதிரி கேப்டன்.. அதே மாதிரி விக்கெட் கீப்பர்.. அதே மாதிரி ஃபினிஷிங்.. தோனியாக மாறிய கேஎல் ராகுல்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தோனியை போல் விக்கெட் கீப்பர், கேப்டன்சி மற்றும் ஃபினிஷர் என்று அனைத்து ரோல்களிலும் அசத்தலாக ஆடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியக் கோப்பை தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

6 மாதங்களுக்கு மேலாக காயமடைந்து ஓய்வில் இருந்த ஒரு வீரரை எப்படி ஐசிசி தொடரில் நேரடியாக ஆட வைக்கலாம் என்று விமர்சனங்கள் பறந்தன. ஆனால் கேஎல் ராகுல் எந்த விமர்சனத்தையும் காதில் வாங்காமல் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார்.

இதன் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தான் என்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். 

இதனால் ரசிகர்கள் பலரும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என்று கூறி வந்தனர். ஆனால் இஷான் கிஷனிடம் கிளவுசை கொடுக்காமல், வழக்கம் போல் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுலே செயல்பட்டார்.

கேட்ச், ரன் அவுட் என்று சிலவற்றை மிஸ் செய்தாலும், கேப்டன்சியில் கில்லியாக செயல்பட்டார் கேஎல் ராகுல். முகமது ஷமி ஆட்டத்தின் மூன்று பகுதிகளிலும் பயன்படுத்திய விதமாக இருக்கட்டும், பும்ராவை தேவைக்கேற்ப அட்டாக்கில் கொண்டு வந்ததாக இருக்கட்டும், பவர் பிளே ஓவர்களுக்கு முன்பாக அஸ்வினுக்கு பரிசோதனை வைத்ததாக இருக்கட்டும், 5 பவுலர்களை மட்டும் வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை 276 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது என்று கேப்டனாக கேஎல் ராகுல் வேறு மாதிரியான வீரராக காணப்பட்டார்.

அதேபோல் பேட்டிங்கின் போதும் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்த போது, ஃபார்மில் இல்லாத இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை ஆட்டத்தை எளிதாக நகர்த்தி கொண்டு வந்தார். 

சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் வெறும் 4 பவுண்டரிகளை மட்டுமே அடித்து அரைசதம் கடந்தார். கடைசியில் வெற்றி உறுதியான பின் தோனியை போல் சிக்சர் அடித்து வெற்றி இலக்கை எட்டினார். 

ஒரு விக்கெட் கீப்பர், கேப்டன் மற்றும் ஃபினிஷர் ரோலில் கேஎல் ராகுல் சிறப்பாக் செயல்பட்டது ரசிகர்கள் பலருக்கும் தோனியை நினைவுப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!