விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். 

ஜனவரி 31, 2023 - 01:08
விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். 

கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் (30) இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார். 

சடலம்  கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன், பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கிளிநொச்சியில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். 

சிறந்த புகைப்பட கலைஞனாக புகைப்பட ஊடகவியலாளனாக பல கதை சொல்லும் புகைப்படங்களை செய்திகளின் ஊடாக வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!