யாழ் நட்சத்திர விடுதியில் இளைஞர் - யுவதிகள் போதை விருந்து - வெளியான தகவல்
தனிநபருக்கான ஒரு டிக்கட் 2000 ரூபாய்க்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது

யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் போதை விருந்து இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் இந்த போதைப்பொருள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மிகவும் இரகசியமாக இந்த விருந்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விருந்தில், தனிநபருக்கான ஒரு டிக்கட் 2000 ரூபாய்க்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா: விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!
சர்ச்சைக்குரிய போதை விருந்தில் சுமார் 54 தனி நபர்களும், 80 இளம் ஜோடிகளும் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விருந்துக்கு வந்தவர்கள் அதிக பெறுமதியான மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் யாழ்ப்பாண சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை சீர்கெடுக்கும் வகையில் இவ்வாறான விருந்துகளை தென்னிலங்கை அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.