யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய விருந்தில் நடந்தது என்ன? விளக்கமளித்துள்ள நிர்வாகம்
யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் போதை விருந்து இடம்பெற்றுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் போதை விருந்து இடம்பெற்றுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், குறித்த விருந்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என நட்சத்திர விடுதி முகாமைத்துவம் விளக்கமளித்துள்ளது.
நட்சத்திர விடுதியின் நிர்வாகம் சார்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விளக்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு நடந்து முடியும் வரை மாநகரசபை பிரதிநிதிகள் மேற்படி நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்து உணவகத்துக்கு வெளியே 06 பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது நிறுவனம் சார்பில் அனுமதிக்கப்பட்ட மதுபானம் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், நிகழ்வு முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றும் நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றனர் என நட்சத்திர விடுதி நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.