ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம் 

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற கடையடைப்பு போராட்டத்தால் யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முக்கிய நகரங்கள் இயல்பு நிலையை இழந்தன.

ஒக்டோபர் 20, 2023 - 16:09
ஒக்டோபர் 20, 2023 - 17:12
ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம் 

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற கடையடைப்பு போராட்டத்தால் யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முக்கிய நகரங்கள் இயல்பு நிலையை இழந்தன.

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படுகின்ற வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தால் கடையடைப்பு போராட்டம் காரணமாக தென்மராட்சியின் பிரதான நகரங்களான சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய நகரங்களில் உள்ள மருந்தகங்கள் உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் சந்தை தொகுதிகளும் முற்றாக மூடப்பட்டிருந்தன. 

இதே வேளை தவணைப் பரீட்சைகள் இடம்பெறுவதால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் கிரமமாக செல்வதையும் அவதானிக்க முடிந்தது.

சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் சட்டத்தரணிகளின் புறக்கணிப்பால் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம்  நகரங்களில் உள்ள அரச தனியார் வங்கிகள் வழமை போன்று இயங்கிக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்ட பொழுதும் உள்ளூர் வெளியூர் தனியார் பேருந்துகள் முற்றாக சேவையில் ஈடுபடவில்லை.

பு.கஜிந்தன்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!