இத்தாலி முதியோர் இல்லத்தில் தீ - 6 பேர் உயிரிழப்பு
தீயணைப்பாளர்கள் கட்டடத்திலிருந்து பலரைக் காப்பாற்றியதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

இத்தாலியின் மிலான் (Milan) நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று (7) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டுத் தீயணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தீயணைப்பாளர்கள் கட்டடத்திலிருந்து பலரைக் காப்பாற்றியதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
அந்த முதியோர் இல்லத்தில் 210 முதியவர்கள் வசித்து வந்த நிலையில், தீ மூண்டதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை கூறியது.
முதியோர் இல்லத்தின் அறை ஒன்றில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.