நாட்டின் சில பகுதிகளில் மழை - விவரம் இதோ!
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யும்.

இன்று (03) காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழைஅல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளில், 50 கிமீ வேகத்திலும் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 50 கிமீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.