ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலி 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். 

ஒக்டோபர் 12, 2023 - 14:09
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலி 

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேரை காணவில்லை.

வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். அமெரிக்கர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!