நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

பெப்ரவரி 10, 2025 - 20:28
நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோக முறையை நிர்வகிப்பதற்காக பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட குறிப்பிட்ட காலப்பகுதியில் இன்றும் நாளையும் தலா ஒன்றரை மணிநேரம் மின்சார விநியோகத் தடைகள் இடம்பெறும்.

இலங்கை முழுவதும் நேற்று மின்சாரத் தடை ஏற்பட்டதுடன், முற்பகல் 11.15 மணியளவில் முழு நாட்டையும் பாதித்தது. பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மின்தடை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைக மாலை 6.00 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் அடுத்தடுத்த பிரச்சினை எழுந்தது.

இதனால், தேசிய மின்கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் இழப்பு ஏற்பட்டதுடன், மின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது.

இந்த நிலையில், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின் விநியோக துண்டிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!